Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM

மதுரையில் பஸ்போர்ட் அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை

மதுரையில் கிடப்பில் உள்ள பஸ்போர்ட் திட்டத்தை செயல் படுத்த திமுக தலைமையிலான மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங் களில் விமானநிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பஸ் போர்ட் அமைக்க மத்திய அரசு திட்டம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் கடந்த அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரையில் பஸ்போர்ட் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரடிக்கல், திருப்பரங்குன்றம் தொகுதிக் குட்பட்ட மேலக்குயில்குடி கிராமம், மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட மாட்டுத்தாவணி ஆகிய இடங்களை பார்வையிட்டனர். ஆனால், அதன் பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது: பஸ்போர்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மதுரை வளர்ச்சி பெறும். மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வைகையின் வட பகுதியில் உள்ளது. எனவே, வைகையின் தென்பகுதியில் பஸ் போர்ட் அமைத்தால் மதுரையின் மற்ற பகுதிகளும் வளர்ச்சி பெறும்.

மாநில அரசு இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்து ரை செய்தால் உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு பஸ்போர்ட் அமைக் கப்பட்டுவிடும். முந்தைய அதிமுக அரசு, இந்த திட்டம் தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதுள்ள மாநில அரசு முன்னெடுத்தால் உறுதியாக மது ரைக்கு பஸ் போர்ட்டை கொண்டு வர முடியும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x