Published : 08 Sep 2021 11:37 AM
Last Updated : 08 Sep 2021 11:37 AM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று (செ .8) மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தில், “ அகதிகளாக வருவோரை மத ரீதியாக பிரித்து பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 2019- ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கும், மத நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இல்லை.
இந்திய நாட்டின் ஒற்றுமையை போற்று வகையில் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டப் பேரவை வலியுறுத்துகிறது” என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT