Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM
கோவை/ புதுக்கோட்டை/ திருவண்ணாமலை/ பொள்ளாச்சி
தமிழகத்தில் கோவை, புதுக் கோட்டை, கரூர், திருவண்ணா மலை மாவட்ட அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 12 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகிஉள்ளது.
கரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ம் தேதி கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி திறக்கப்பட் டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாண வர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் தவிர திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, மன்னார்குடி அருகே முன்னாவல்கோட்டை அரசுப் பள்ளி மாணவர், திருத்துறைப் பூண்டி அருகே தலைக்காடு அரசுப் பள்ளி மாணவர், வலங்கைமான் அருகே அரித் துவாரமங்கலம் அரசுப் பள்ளி மாணவர் என 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 2 பேருக்கும் புரவிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ஒருவருக்கும் பணிக்கம்பட்டி தனியார் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
ஆசிரியைக்கு கரோனா
கரூர் மாவட்டம் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கடந்த 3-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கரோனா உறுதியானது. இதே போல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஆசிரியையின் மகனுக்கும் தொற்று உறுதியானது.
திருவண்ணாமலை மாவட் டம், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து, அந்த ஆசிரியரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஆசிரியரின் 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தினர் 5 பேருக்கு தொற்று இருந்தது. இதே பள்ளி யைச் சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நேற்று மூடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT