Published : 07 Sep 2021 03:14 AM
Last Updated : 07 Sep 2021 03:14 AM
சிதம்பரம் பகுதியில் முதலை கடித்ததால் இருவர் காயமடைந்தனர்.
சிதம்பரம் அருகே கிள்ளையை அடுத்துள்ள பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜீவ்காந்தி(35). இவர் நேற்று மதியம்இவர் அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் முகம் கழுவியுள்ளார். வாய்க்காலில் இருந்து முதலை அவரது முகத்தை கடித்துள்ளது. இதனால் ராஜீவ்காந்தி அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிதம்பரம் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் வனசரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனப்பணியாளர்கள் புஷ்பராஷ், அமுதப்பிரியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். வாய்க்காலில் இருந்த 4 அடி நீளமும் 50 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து அதனை வக்காரமாரி குளத்தில் விட்டனர்.
மற்றொரு சம்பவம்
குமாட்சி அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன்(48). இவர் நேற்று மாலை அங்குள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது முதலை ஒன்று அவரது வயிறு, வலது தொடையை கடித்தால் மாரியப்பன் அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம்கேட்டு பொதுமக்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT