Published : 06 Sep 2021 09:10 PM
Last Updated : 06 Sep 2021 09:10 PM
மக்களுக்குப் பயன்தரும் அனைத்துத் திட்டங்களை செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன் என பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேநீர் விருந்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி துணை நிலை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மத்தியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை நிறைவு செய்திருக்கிறது, அதில் மக்களுக்கு பயன்படும் பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறது.
மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் என்ற வகையிலும் புதுச்சேரி மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர் என்ற வகையிலும் மக்களுக்குப் பயன்தரும் வகையில் அமையும் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன்."என்று தெரிவித்தார்.
அதையடுத்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில்,
"புதுச்சேரியின் மீது அக்கறை கொண்ட துணைநிலை ஆளுநர் இருக்கும் வரையில் புதுச்சேரி நல்ல முன்னேற்றம் அடையும். புதுச்சேரி பசுமையான மாநிலமாக வேண்டும் என்று நினைத்து 75,000 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று வலியுறுத்தினார். புதுச்சேரியின் மீது அவருக்கு இருக்கம் அக்கறையை இது வெளிப்படுத்துகிறது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறது. மக்களின் நன்மைக்காக அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT