Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ஒன்றிய பாமக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரத்தில் ஒருங்கிணைந்த ஒன்றிய பாமக உள்ளாட்சி தேர்தல்ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் புகழேந்திதலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல்,சம்பத், கார்த்திகேயன், ஏழுமலை, வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சீனுவாசன் வரவேற்றார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறுவது குறித்து மாநில துணை பொதுச் செயலாளர் தங்கஜோதி, மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் புண்ணியக்கோடி, மாநில சமூக ஊடகபேரவை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பேசினர்.
அப்போது வன்னியர்களுக்கு 10. 5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டமுன் வடிவு செய்த முன் னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமாக நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதை நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணி மண்டபமும், அவர்களின் குடும்பத்தின் தகுதியான ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி
ஆகியோருக்கும் நன்றித் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ராமதாஸ் ஆணைப்படி அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக் கழகம் பெயர் நீக்கம், கோடநாடு கொலை கொள்ளை வழக்குத் தொடர்பான மேல் விசாரணை தொடர்பான பிரச்சினைகளில் அதிமுக வெளிநடப்பு செய்தபோது, பாமக உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் அமைதி காத்தது போன்ற சம்பவங்கள் அதிமுக தலைமைக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில் பாமக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாகபேசியது, நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றியிருப்பது விழுப்புரம் மாவட்ட அதிமுகசெயலாளர் சி.வி.சண்முகத் துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி யுள்ளதாம்.
ஆனால் பாமகவினரோ முதல்வர் என்ற முறையில் சில நல்ல காரியங்கள் செய்தால் அதற்கு நன்றி தெரிவிப்பதில் என்னதவறு இருக்கிறது என்கின்றனர். எப்படியோ விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாமக- அதிமுக இடையே உரசலுக்கும் உள்குத் துக்கும் பஞ்சமிருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT