Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

செவிலியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: விழுப்புரம் மாவட்ட இளையோர் விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி

அயல்நாட்டில் செவிலியர்கள் பணிகளுக்கான வேலைவாய்ப்பில் பங்கேற்க விரும்பும் 500 பேருக்கு ஆங்கில திறன் தேர்வை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்இணையதள வழியே நடத்தவிருப் பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறு வனம் கடந்த 40 வருடங்களாக அயல்நாட்டில் பணிபுரிய விரும்பும்வேலைநாடுநர்களை அங்கீகாரமற்ற மற்றும் நேர்மையற்ற நிறு வனங்களின் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவி வருகிறது. உலகத்தரத்திற்கு நிகராக திறன்களை உடைய இளைஞர்களை உருவாக்குதல், அயல்நாட்டில் பணிபுரிய விரும்பும் வேலைநாடுநர்களின் திறன்களை மேம்படுத்த உதவி செய்கிறது.

இங்கிலாந்து நாட்டில் பணி புரிய ஆங்கிலத்தில் பேசும், எழுதும், படிக்கும் மற்றும் கேட்கும் திறன்களை மேம்படுத்துதல், தமிழ்நாட்டிலிருந்து திறனுள்ள மனிதவளத்தை அதிகரித்தல், அனுப வமுள்ள வேலைநாடுநர்களுக்கு அயல்பணி பெறவும் உதவியாக உள்ளது. வேலை நாடுநர்களுக்கு அயல் பணிச்சூழல் மற்றும் பணித்தன்மை குறித்து விரிவாக விவரித்தல் உள்ளிட்டப் பணிகளை செய்து, அயல் நாடுகளுக்கு மனிதவளம் வழங்கும் நம்பகத் தன்மையான அரசு நிறுவனமாக செயல்படுகிறது.

இதுவரை சிங்கப்பூர், ஆஸ்திரே லியா, கனடா, மலேசியா, பக்ரைன்,லிபியா, குவைத், சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளில் 10350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவத்துறைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லு நர்கள், திறனுடைய மற்றும் திறனற்ற பணியாளர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அயல்பணி வழங்கும் நிறுவனங் கள் தங்கள் நாட்டின் மொழி மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடுநர்களையே தேர்வு செய்கிறது. அந்த வகை யில் சவூதிஅரேபியாவில் செவிலி யர் பணிக்காக ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 500 செவிலியர்களை தேர்வுசெய்யும் வகையில், துறைசார் ஆங்கில திறன் தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஆரம்ப நிலை ஊதியமே வருடத் திற்கு தோராயமாக ரூ.18 லட்சம் வழங்கவுள்ளது.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அயல்பணி தேடும் வேலைநாடுநர்களுக்கு வாய்ப் புகளை அதிகப்படுத்தும் நோக்கில் செவிலியர்களை தேர்வு செய்யும் "M/s. Health Education England" என்ற இங்கிலாந்து நிறுவனத்துடன், வீட்டுப்பணியாளர்களை தேர்வு செய்யும் "M/s. Al Durra Manpower" குவைத் நாட்டுடன் மற்றும் "M/s. IndiaTrade and Exhibition Centre" என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப் பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"www.omcmanpower.com" என்ற இணையதளத்தை பயன்படுத்தி அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தை அணுகலாம்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அயல் நாட்டுப்பணி தேடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x