Published : 08 Feb 2016 10:42 AM
Last Updated : 08 Feb 2016 10:42 AM
பெங்களூருவில் ஜனவரி 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக் கான பிரிவில், தமிழக மாணவர் ச.சந்தோஷ் வெற்றி பெற்றுள்ளார். மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவியை கண்டுபிடித்த தற்காக 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரில் ஜனவரி முதல் வாரத்தில் நடை பெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
தான் கண்டுபிடித்துள்ள, மின் சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி, உடலுக்கு ஒரு பயிற்சியாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இவரது தந்தை கே.சங்கர், கட்டுமானத் தொழிலாளி. தாய் ச.விஜயலட்சுமி. இவர் கள், திருவண்ணாமலை, திருக் கோவிலூர் சாலை முல்லா தெரு வில் ஒரு வீட்டில் 3-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.
தனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து மாணவர் ச.சந்தோஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நான் திருவண்ணாமலை எம்.ஏ.காதர் சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட என் தாய், தரைத்தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு தண்ணீர் குடத்தை தினமும் சுமந்து செல்வார்.
வழிகாட்டிய ஆசிரியர்
மாடியில் குடியிருப்பவர்களுக்கு தண்ணீர் சுமந்து செல்வதில் இருந்து விடிவுகாலம் இல்லையா? என்ற எண்ணமே புதிய படைப்புக்கு வழி வகுத்தது. இதுகுறித்து எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷாவிடம் தெரிவித் தேன். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகை யில், தொட்டியில் இருந்து எளிய முறையில் தண்ணீரை மேலே கொண்டு செல்ல புதிய கருவியை உருவாக்க வேண்டும் என்றேன். அவரும் என்னுடைய ஆர்வத்துக்கு ஊக்கமளித்து ஆலோசனை வழங் கினார். அத்துடன், மின்சாரம் இல் லாமல் நீரேற்றும் கருவியை வடி வமைப்பதற்கான வழிகளை விளக் கினார்.
அறிவியல் ஆசிரியரின் வழிகாட் டுதல்படி உபகரணங்களை வாங்கி வந்து வடிவமைத்தோம். பலகை, கம்பி, சைக்கிளுக்கு காற்ற டிக்கும் பம்ப்பில் இருக்கும் 2 சிலிண் டர் ஆகியவற்றை சேகரித்தோம். அவை அனைத்தும் பயன்படுத்தப் படாமல் தூக்கி வீசப்பட்ட பொருட் களாகும். அவற்றைக் கொண்டு புதிய கருவியை வடிவமைத்தோம்.
பின்னர், தண்ணீர் தொட்டிக்கு பதிலாக கீழே 2 வாளிகள் மற்றும் மேலே பிளாஸ்டிக் டப்பாவை வைத்தோம். சைக்கிள் பம்ப்புடன் வால்வ் மூலமாக வாளிகள் மற்றும் டப்பாவுடன் குழாயை இணைத்தோம். சைக்கிள் பம்ப்பை இயக்கும்போது அதன் உள்ளே இருக்கும் பிஸ்டன், தண்ணீரை இழுத்து மிக விரைவாக மேலே கொண்டு சென்றுவிடும்.
உடலுக்கு பயிற்சி
கை, கால்களால் இயக்கும் வகையில் நீரேற்றும் கருவி வடிவமைக்கப்பட்டது. கைகளுக்கு கயிறும், கால்களுக்கு பலகையும் பொருத்தப்பட்டது. அவ்வாறு இயக்குவதன் மூலம் உடலுக்கு பயிற்சியும் கிடைக்கிறது. இதற்கான செலவு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவு. இதன்மூலம் 50 அடி உயரத்துக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம். 1 நிமிடத்தில் 10 லிட்டர் தண்ணீர் சென்றுவிடும். 2 மாதத்தில் கருவியை வடிவமைத்து வெற்றி கண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷா கூறும்போது, “மாணவர் சந் தோஷூக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதன் எதிரொலிதான் மின்சாரம் இல்லாமல் நீரேற்றும் கருவி உருவாக்கப்பட்டது. பழைய பொருட்களை பயன்படுத்தியதால் செலவு குறைவு. புதிதாக தயாரிக்க ரூ.2 ஆயிரம் செலவாகும். தென்னிந் திய அளவில் வெற்றி பெற்ற மாணவர் ச.சந்தோஷ், தேசிய அளவிலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT