Last Updated : 02 Sep, 2021 10:51 AM

 

Published : 02 Sep 2021 10:51 AM
Last Updated : 02 Sep 2021 10:51 AM

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 739 கன அடியாக அதிகரிப்பு

எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர்.

கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 739 கன அடியாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (செப். 01) இரவு பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை (செப். 02) 739 கன அடியாக அதிகரித்தது. நேற்று மாலை நீர்வரத்து 390 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு வலது மற்றும் இடது புறக்கால்வாய் 177 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் 47.95 அடிக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் 36 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று 400 கன அடியாக இருந்தது. இன்று காலை 488 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில் 41.33 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 400 கன அடியும், பாசனக் கால்வாயில் 88 கன அடி என மொத்தம் 488 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எண்ணேகொல்புதூர் தடுப்பணை உட்பட 11 தடுப்பணைகளைக் கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x