Published : 01 Sep 2021 03:19 AM
Last Updated : 01 Sep 2021 03:19 AM
சொத்தை பெற்றுக்கொண்டு கவனிக்க தவறிய மகன்களிடம் இருந்து நிலத்தை மீட்டு பட்டா மாற்றம் செய்து 2 முதியவர்களிடம் தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஒப்படைத்தார்.
தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் மாணிக்கம்(85). இவர், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை, சரி பாதியாக பிரித்து தனது மகன்கள் காத்தவராயன், சங்கர் ஆகியோருக்கு கடந்த 2018-ம் ஆண்டு தான செட்டில்மென்ட் அடிப்படையில் எழுதி வைத்துள் ளார். அதன்பிறகு தாய், தந்தையை மகன்கள் கவனித்துக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து தனது மகன் களுக்கு எழுதி கொடுத்த 3 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு ஆட்சியரிடம், மாணிக்கம் மனு அளித்தார். அதன்மீது வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் விசா ரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பரா மரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் மாணிக்கத்துக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அவரது பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாணிக்கத்தை நேரில் வரவழைத்து பட்டாவை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வழங்கினார்.
இதேபோல், திருவண்ணாமலை அடுத்த உடையானந்தல் கிராமத்தில் வசிப்பவர் ராயர். இவர், தனக்கு சொந்தமான 3.66 ஏக்கர் நிலத்தை மகன் ஹரிதாசுக்கு எழுதி வைத்துள்ளார். அதன்பிறகு பெற்றோரை மகன் கவனித்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து ராயர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, மகனுக்கு எழுதி கொடுக்கப்பட்டதை ரத்து செய்து, ராயர் பெயருக்கு மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ராயரிடம் பட்டாவை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT