Published : 12 Feb 2016 10:40 AM
Last Updated : 12 Feb 2016 10:40 AM
’’டெல்டா மக்கள் அனைவருக்கும் நிலம்.. அனைவருக்கும் வீடு.. கண்ணை மூடுறதுக்குள்ள இதை சாதிக்கணும்னு மனசுல உறுதி இருக்கு’’ என்கிறார் உழவனின் நில உரிமை இயக்கத்தின் செயலாளர் பத்ம கிருஷ்ணம்மாள் (ஜெகந்நாதன்).
18 வயதில் கல்லூரிப் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத் தில் குதித்தவர் ஜெகந்நாதன். விடுதலை இந்தியாவிலும் வினோபாபாவேயுடன் பூமி தான இயக்கத்தில் இணைந்து நிலமற்ற வர்களுக்காக போராடினார். காந்தி, நேரு, காமராஜரோடு நெருக்கமாக இருந்த ஜெகந்நாதன், நெருக்கடி நிலை சித்ரவதைகளுக்கு வலது கண் பார்வையை பறிகொடுத்தார். அதற்குப் பிறகு மனைவி கிருஷ்ணம்மாள்தான் அவருக்கு இன்னொரு கண்ணாய் இருந்தார்.
1968-ல் கீழவெண்மணியில், கூலி கேட்டதற்காக 44 தலித்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கிருஷ்ணம்மாள் - ஜெகந்நாதன் தம்பதியை வெகுவாகப் பாதித்தது. டெல்டா பகுதியின் நிலமற்ற விவ சாயிகளுக்கு நிலங்களை பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நாகை மாவட்டம் கூத்தூரில் வினோபாபாவே ஆசிரமத்தை உருவாக்கி அங்கிருந்து கொண்டே நிலமற்ற மக்களுக்காக அறவழியில் போராடத் தொடங்கினார்கள்.
இதற்கிடையில், பிஹாரில் சாமியார் ஒருவரின் பிடியிலிருந்து 24 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மூன்றாண்டுகள் போராடி நிலமற்ற மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார் கிருஷ்ணம்மாள். இதற்காக 1989-ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டது. தமிழகத்தில் பாக்கெட் சாராயம், இறால் பண்ணைகளுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டங் களை நடத்திய ஜெகந்நாதன், உச்ச நீதிமன்றம் வரைச் சென்று டெல்டா வில் இறால் பண்ணைகளை ஒழித்தார்.
கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாத னும் இணைந்து டெல்டா மாவட்டங் களில் 13 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்காக போராடி பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். குடிசைவாசிகளுக்காக, தானே செங்கல் அறுத்து ரூ.40 ஆயிரம் செலவில் மாதிரி வீடுகளை கட்டி னார் கிருஷ்ணம்மாள். அதுதான் பின்னர் கலைஞர் வீட்டு வசதி திட்ட மாகியது. திமுக ஆட்சியில் அம்பேத் கர் விருதால் கவுரவிக்கப்பட்ட கிருஷ்ணம்மாளுக்கு மாற்று நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
வாஜ்பாய் ஆட்சியில் ஜெகந் நாதனையும் பத்ம விருது தேடி வந்தது. ஆனால், “நடப்பது மக்களுக்கான ஆட்சியல்ல.. அத னால் இந்த விருதை வாங்க எனக்கு விருப்பமில்லை” என்று மறுத்துவிட் டார் ஜெகந்நாதன். இறுதி மூச்சு வரை நிலமற்ற ஏழைகளுக்காக குறிப்பாக தலித்களுக்காகவே வாழ்ந்த ஜெகந்நாதன் 2013 பிப்ரவரி 12-ல் தனது 99 வயதில் இயற்கை எய்தினார்.
இன்று ஜெகந்நாதனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நினைவு கூரப்படும் நிலையில், அவர் விட்டுச் சென்ற பணியைத் தனி ஆளாய்த் தொடரும் கிருஷ்ணம்மாள், “சமீபத் திய மழையின் போது டெல்டா பகுதி மக்கள் குடியிருக்க வீடுகூட இல் லாமல் ஈர மண்ணில் பழைய துணியை விரித்துப் போட்டு குழந் தையை படுக்க வைத்திருந்ததைப் பார்த்தேன்; மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
சுதந்திரம் அடைந்து 68 ஆண்டு கள் கடந்தும் நாடு இந்த கதியில தான் இருக்கு. வளர்ச்சி, வளர்ச் சின்னு சொல்றாங்க. ஆனா, எந்த வளர்ச்சியும் மக்களுக்கு வந்து சேரல; சாராயம்தான் ஆறா ஓடுது. அன்று அரைப்படி நெல் கூலிக்காக போராடிய மக்களுக்கு சொந்தமா நிலம் வாங்கிக் கொடுத்ததுபோல் குடிசைகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பக்கா வீடு கட்டிக் குடுக்கணும்; கண்ணை மூடுறதுக் குள்ள எப்படியாவது இதைச் சாதிக்கணும்கிற மன உறுதியோட இருக்கிறேன்’’ என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT