Published : 01 Jun 2014 11:48 AM
Last Updated : 01 Jun 2014 11:48 AM
தமிழக சட்டப்பேரவை ஜூலை 10-ம் தேதி கூடும் என்று சட்டப் பேரவை செயலாளர் அறிவித் துள்ளார்.
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது. விவாதத்தின்போது உறுப்பி னர்கள் பேசினர். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். பின்னர் சட்டப்பேரவை கூட்டம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை ஜூலை 10-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையின் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ் நாடு சட்டப்பேரவை விதி 26 (1) ன் கீழ், பேரவைத் தலைவர், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை, ஜூலை 10-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவை ஜூலை 10-ல் கூடிய பின்னர் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும்.
துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஒரு மாத காலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை மீதும் விவாதம் முடிய முடிய அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் அவற்றுக்கு பதில் அளித்து பேசுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT