Published : 30 Aug 2021 04:04 PM
Last Updated : 30 Aug 2021 04:04 PM

ஓசூர் அரசு மருத்துவமனையில் அசோக் லேலண்ட் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ஓசூர்

ஓசூர் அரசு மருத்துவமனையில் அசோக் லேலண்ட் நிறுவிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது. அசோக் லேலண்ட் நிறுவனம், ஓசூர் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவியுள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் ஏ. செல்லகுமார், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத் தலைமை நிலைத்தன்மை அதிகாரியும், கம்யூனிகேஷன்ஸ், சி.எஸ்.ஆர். மற்றும் நிறுவன விவகாரப் பிரிவுத் தலைவருமான பாலசந்தர் என்.வி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் சேர்ந்து நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இவை பாட்டில்களில் அடைக்கும் வசதியுடன் 4000 லிட்டரைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. ரூ.1.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதார மையங்களுக்கும் உடனடியாக ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும்.

இதுகுறித்து அசோக் லேலண்ட் எம்.டி. மற்றும் சி.இ.ஓ. விபின் சோந்தி கூறுகையில், ‘‘கோவிட் -19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராட நாடு ஒற்றுமையுடன் இணைந்து இருக்கும் தருணத்தில், இந்தச் சவாலான நேரத்தில் உதவும் வகையில் அரசுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளதன் மூலமாக உதவியை அளித்துள்ளோம். மேலும், மக்களுக்கு இலவசத் தடுப்பூசி செலுத்துவதற்காக காவேரி மருத்துவமனையுடன் இணைந்துள்ளோம். இந்தச் செயல்பாடுகள் இந்திய பெருநிறுவனங்களின் கோவிட்-19 தடுப்புக்கான செயல்பாட்டில் எங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை மேலும் உறுதிப்படுத்துகிறது’’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அசோக் லேலண்ட் நிறுவன என்.வி. தலைமை நிலைத்தன்மை அதிகாரியும், கம்யூனிகேஷன்ஸ், சி.எஸ்.ஆர். மற்றும் நிறுவன விவகாரப் பிரிவு தலைவருமான பாலச்சந்தர் கூறுகையில், ‘‘இங்கு நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர் பிளான்ட்டுகள் மூலம், ஓசூர் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார மையங்கள் பெரும் பயனடையும். அவை தொடர்ந்து ஆக்சிஜனை விநியோகம் செய்யும் வகையில் தற்சார்பை ஏற்படுத்தித் தரும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x