Published : 17 Feb 2016 10:24 AM
Last Updated : 17 Feb 2016 10:24 AM
மகாமகக் குளத்தில் விடிய விடிய நீராடிய பக்தர்கள்
மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் முன்னே செல்ல, மங்காளம்பிகையுடன் ஆதிகும் பேஸ்வரர் இரட்டை வீதியுலா செல் லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், குடமூக்கு, குடந்தை கீழ்க்கோட்டம், குடந்தை காரோணம், பாஸ்கர ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படும் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இவ்விழா கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலை முதன் மைப்படுத்தி கொண்டாடப்படு கிறது. அதன்படி, கடந்த 13-ம் தேதி இக்கோயிலில் மகாமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 2 நாட்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கும் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 19 விமானங்களில் (பட்டறைகளில்) 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்கள், சேக்கிழார் என 73 பேர் முன்னே செல்ல, அதனைத் தொடர்ந்து அஸ்திர தேவர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் வர, புதிதாக ரூ.8 லட்சம் மதிப்பில் வடி வமைக்கப்பட்ட கண்ணாடி சப்த ஸ்தான பல்லக்கில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகையுடன் வீதியுலா சென்றார்.
மங்கள வாத்தியங்கள் முழங்க ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இருந்து யானை மங்களத்துடன் புறப் பட்ட வீதியுலா, பின்னர் நாகேஸ் வரர் கோயில் 4 வீதிகளிலும் சென்று இரட்டை வீதியுலாவாக நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்குடந்தை சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.
இதுகுறித்து திருக்கூட்டத்தின் நிறுவனத் தலைவர் கோபு நடராஜ செட்டியார் கூறும்போது, “மயிலாப்பூர், திருவிடைமருதூரில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடை பெறுவதுண்டு. அதேபோல கும்ப கோணத்தில் மாசிமகத்தின்போது நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 48 ஆண்டுகளாக இடை விடாமல் இந்த வீதியுலா நடத்தப் படுகிறது” என்றார்.
புனித நீராடல்
மகாமக குளத்தில் நேற்று முன் தினம் முதல் நேற்று காலை வரை விடிய விடிய பக்தர்கள் நீராடினர். குளக்கரைகளில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் பக்தர் கள் இரவில் அச்சமின்றி நீராடினர்.
காவல்துறை கெடுபிடி, போக்கு வரத்து நெரிசல் இல்லாததால் இரவு நேரங்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மகாமகக் குளத்தில் கூட்ட நெரிசல் இல்லாமல் நீராடினர். முதல் நாள் சுமார் 1 லட்சம் பேர், 2-ம் நாளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர், 3-ம் நாளான நேற்று முன்தினம் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் புனித நீராடிய நிலையில் 4-ம் நாளான நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT