Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM
திருச்சி சிந்தாமணி- கரூர் பைபாஸ் சாலை நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் காவிரிப் பாலத்திலிருந்து மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு அறிவித்துள் ளதற்கு திருச்சி மாநகர மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகரில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கேற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப் படாததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதைத்தவிர்க்க மாநகரை ஒட்டிய விரிவாக்கப் பகுதிகளை உள்ளடக்கி புதிய வழித்தடங்களில் சாலைகள் அமைக்கவும், போக்கு வரத்து நெரிசலுள்ள பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நேற்று வெளி யிட்ட அமைச்சர் எ.வ.வேலு, ‘‘திருச்சியில் போக்குவரத்து நெரிச லுக்குத் தீர்வு காண்பதற்காக அரைவட்டச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப்படும். தலைமை தபால் நிலையத்திலிருந்து முத்தரையர் சிலை வழியாக நீதிமன்ற ரவுண் டானா வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும். ஓடத்துறை காவிரி பாலத்திலிருந்து அண்ணாசிலை, கலைஞர் அறிவாலயம், குட முருட்டி சோதனைச்சாவடி வழி யாக மல்லாச்சிபுரம் வரை உயர் மட்ட சாலை அமைக்கப்படும்’’ என 3 திட்டங்கள் குறித்து அறிவித் துள்ளார். இதற்கு திருச்சி மாநகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சாலை பயனீட் டாளர்கள் நலக்குழு ஒருங்கிணைப் பாளரான அய்யாரப்பன் கூறும் போது, ‘‘ஓடத்துறை பாலத்திலி ருந்து குடமுருட்டி சோதனைச் சாவடி வரையிலான சாலை எப்போதும் போக்குவரத்து நெரிச லுடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த வழித்தடத்தில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக் கப்படுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இப்பகுதியில் வாகன நெரிசல் ஓரளவுக்கு குறையும்’’ என்றார்.
திருச்சி மாநகர மேம்பாட்டு ஆர்வலர்கள் குழு (டைட்ஸ்) செயற்குழு உறுப்பினர் ஷ்யாம் சுந்தர் கூறும்போது, ‘‘மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளதாலும், நகரின் பிரதான பகுதியாக இருப்பதாலும் கன் டோன்மென்ட் பகுதியிலுள்ள சாலைகள் எப்போதுமே பரபரப் பாக இருக்கும். இதனால் தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை வழியாக புத்தூர் அரசு மருத்து வமனைக்குச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்கள் கூட, பலமுறை நெரிசலில் சிக்கியுள்ளன. இதற்கு தீர்வாக தற்போது தலைமை தபால் நிலையத்திலிருந்து எம்ஜிஆர் சிலை வரை உயர்மட்ட சாலை அமைப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்காக முயற்சி மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி’’ என்றார்.
புதிய அரைவட்ட சுற்றுச்சாலை எங்கே? திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திருச்சி-தஞ்சை (அசூர்), திருச்சி-புதுகை (மாத்தூர்), திருச்சி-மதுரை (பஞ்சப்பூர்), திருச்சி-திண்டுக்கல் (சோழன் நகர்), திருச்சி-கரூர் (திண்டுக்கரை) ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் 43 கி.மீ நீளத்துக்கு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சியில் மேலும் ஒரு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு நேற்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘அசூரிலிருந்து (திருச்சி- தஞ்சை சாலை) கிளிக்கூடு வழியாக லால்குடி (நாமக்கல்- சிதம்பரம் சாலை) வரை 22 கி.மீ தொலைவுக்கு ஒரு திட்டமாகவும், முத்தரசநல்லூரில் இருந்து (திருச்சி- கரூர் சாலை) சமயபுரம் அருகே மாடக்குடி (சென்னை- மதுரை சாலை) வரை ஒரு திட்டமாகவும் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில் அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம் ஓரிரு நாளில் தெரியவரும்’’ என்றனர். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT