Published : 27 Aug 2021 03:47 PM
Last Updated : 27 Aug 2021 03:47 PM

வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் செயல்படும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, இன்று (ஆக. 27) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்:

* 6 நாள்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும்.

* இணைய வழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* பயோ மெட்ரிக் வருகைப் பதிவைப் பயன்படுத்தக் கூடாது.

* கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் திறக்கக்கூடாது.

* பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது.

* வெளி ஆட்கள் பள்ளிகளுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.

* மாணவர்களின் மனநலன் அல்லது உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழு நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும்.

* சுகாதாரத்துறை சார்பில் அடிக்கடி நடமாடும் சுகாதார முகாம் நடத்தப்பட வேண்டும்.

* பள்ளிப் பேருந்துகள், வேன்கள், விடுதிகளிலும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

* அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x