Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM
பழைய பெரியார் பேருந்து நிலை யத்தில் 50 பஸ்களை நிறுத்தும் வசதி இருந்த நிலையில், தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.167 கோடியில் கட்டப்படும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் வெறும் 57 பஸ்களை மட்டுமே நிறுத்துவதற்கு வசதி உள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் ரூ.1,000 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில் ரூ.167 கோடியில் பெரியார் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாகக் கட்டப்படு கிறது. இங்கு மேற்கூரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை மற்றும் பஸ்கள் நிறுத்தும் நடைமேடை உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. மதுரை மண்டலத்தில் 1,300 டவுன் பஸ்கள் உள்ளன. ஆனால், பஸ் நிலையத்தில் வெறும் 57 பஸ்களை மட்டுமே நிறுத்துவதற்கு பஸ்வே நிறுவப்பட்டுள்ளது.
பழைய பெரியார் பேருந்து நிலையம், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் சேர்த்து 50 பஸ்கள் நிறுத்த வசதிகள் இருந்தன. அதனால், கூடுதல் பஸ்கள் வந்து செல்வதற்காகவே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால், குறைந்தளவு பஸ்களை நிறுத்துவதற்கு பஸ்வே அமைக்கப் பட்டுள்ளதால், பேருந்து நிலையம் முன்பு போல் இடநெருக்கடியில் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்துநிலையத்தில் தரைத்தளத்துக்கு கீழ் 2 தளங்களும் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளில் 462 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் அமைக்கப்பட்டு வரு கிறது. வணிக நோக்கில் அதிக கடைகள் கட்டப்படுவதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர் களின் வாகனங் களை மட்டுமே மல்டிலெவல் பார்க்கிங்கில் நிறுத்த முடியும். பஸ் நிலையம் வரும் பயணிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வாக னங்களை மல்டிலெவல் பார்க் கிங்கில் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால், புதிய பேருந்து நிலையம் கட்டும் நோக் கமே நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது போக்குவரத்து நெரி சலைக் குறைக்கும் வகையில் பெரியார் பேருந்து நிலைய பகுதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது. மேலும், பயணிகள் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வந்து செல்ல சுரங்க நடைப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில் புதிய பஸ் நிலையப் பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT