Published : 01 Jun 2014 10:24 AM
Last Updated : 01 Jun 2014 10:24 AM

டாக்டர்களிடம் பல குரல்களில் பேசி பல ஆயிரம் மோசடி: போலீஸாரிடம் சிக்கிய சென்னை இளைஞர்

திண்டுக்கல் விஜய் மருத்து வமனை டாக்டர் முரளிதரன், ரக்ஷா மருத்துவமனை டாக்டர் ஷியாம், ஜெகநாதன் மருத்துவமனை டாக்டர் அமிர்தகடேஷ்வர் ஆகியோ ரிடம் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசி மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பி.ஏ. என ஏமாற்றி ரூ.32 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள் திண்டுக்கல் வடக்கு போலீஸில் புகார் செய்தனர். எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தர வின் பேரில் இன்ஸ்பெக்டர் பரவாசு தேவன் தலைமையில் தனிப்படை போலீஸார், மருத்துவர்களிடம் மோசடி செய்த சென்னை தண்டை யார் பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீக்கை கைது செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது: டாக்டர்கள், கல்லூரி உரிமையாளர் ஒருவரிடமும் செல்போனில் பேசிய மர்ம நபர், நான் மின்துறை அமைச்சரின் பி.ஏ. பேசுறேன், பிளக்ஸ் பேனர் வைக்கணும், 25 ஆயிரம் ரூபாய் கொடுங்கள், எங்களுடைய உதவியாளர் ஒருவரை பேசச் சொல்றேன் எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் கூறியபடி மற்றொரு குரலில் வேறொரு நபர் நான்கு பேரிடமும், அமைச்சர் பி.ஏ. சொன்னார், வங்கி எண்ணைச் சொல்லி, அதில் பணத்தை போடுங்கள் எனக் கூறியுள்ளார். இவர்களில் டாக்டர் அமிர்தகடேஷ்வரர், தனியார் கல்லூரி உரிமையாளர் ஆகியோர், ஆடிட்டிங் பிரச்சினை இருக்கு, நேரடியாக ஆளை அனுப்புங்கள், கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். அதற்கு அந்த நபர், கட்சிக்காரர்களை அனுப்பினால் வந்து சேராது எனக் கூறியுள்ளார்.

அமைச்சர் பி.ஏ. சொன்னார் எனக் கூறியதால் டாக்டர் ஷியாம் ரூ.25 ஆயிரத்தையும், டாக்டர் முரளிதரன் ரூ.7 ஆயிரத்தையும் அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் போட்டுள்ளனர். மற்றவர்கள் சந்தேகப்பட்டு, விசாரித்தபோது அமைச்சரின் பி.ஏ. பணம் கேட்க மாட்டார். இதில் ஏதோ தவறு நடக்கிறது என உஷார்படுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறியது போலவே, அந்த மர்ம நபர் பேசிய செல்போன் அணைக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது. அந்த மர்ம நபரின் கணக்கு உள்ள சென்னை வங்கியில் சென்று, அந்த மர்ம நபரின் போட்டோவை எடுத்து சென்னையில் சந்தேகப்படும் இடங்களில் விசாரித்தோம்.

ஆட்டோ டிரைவர் கொடுத்த துப்பில் மோசடி செய்த ரபீக்கை கைது செய்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x