Published : 24 Aug 2021 12:56 PM
Last Updated : 24 Aug 2021 12:56 PM
தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்துள்ளார்.
கே.டி.ராகவன், தமிழக பாஜக பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில், இன்று (ஆக. 24) அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர், பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன்.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!".
இவ்வாறு கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்...
1/2— K.T.Raghavan (@KTRaghavanBJP) August 24, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT