Published : 04 Feb 2016 03:43 PM
Last Updated : 04 Feb 2016 03:43 PM
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புற்றநோய் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து ள்ளனர்.
இன்று உலக புற்றுநோய் தினம். இதையொட்டி, மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவ நிபுணர்கள் கிருஷ்ணகுமார், விஜயபாஸ்கர், கிருஷ்ணகுமார் ரத்தினம், ஆனந்தசெல்வகுமார் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டில் 76 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் 55 சதவீத இறப்புகள் பின்தங்கிய நாடுகளில் நடைபெற்றுள்ளன. தற்போது 20 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கும் நிலை யில் உள்ளனர். ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோய் உலகிற்கு பெரிய சவாலாக உள்ளது. ஏழை நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தி வருகிறது. எச்ஐவி, எய்ட்ஸ், காசநோய், மலேரியாவால் இறப் பவர்களை விட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
உலகளவில் 2030-ம் ஆண்டில் 2.14 கோடி புதி யவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதது வேத னையானது. இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வரும் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் புற்றுநோய் வேகமாக பரவிவருகிறது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் பின்தங்கிய நிலையே உள்ளது.
புற்றுநோயால் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதும், சிகிச்சை மையங்கள் தொலை தூரங் களில் இருப்பதால் சிகிச்சை பெற முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறிந்தால் எளிதில் கு ணப்படுத்தலாம். புற்றுநோய் 30 சதவீதம் புகையிலை, புகைப்பிடித்தல், 20 சதவீதம் வைரஸால் வருகிறது. கொழுப்பான உணவுகள், மது அருந்துதல், பான்பராக், குட்கா போன்ற போதை பொருள்களை சாப்பிடுவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம். நம்பிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும். கொழுப்பு குறைந்த நார்ச் சத்துள்ள உணவு, சுகாதாரமான காற்று, உடற்பயிற்சி, போதுமான சூரிய ஒளி, இயற்கையான தூக்கம், ஹார்மோன் மருந்துகளைத் தவிர்த்தல் மற்றும் புகையி லையை ஒழித்தல், மகிழ்ச்சியான மனநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT