Published : 02 Feb 2016 09:01 AM
Last Updated : 02 Feb 2016 09:01 AM
பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் கிராம மக்கள், வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதி கரித்து வருவதாக புகார் எழுந் துள்ளது. இதனால், அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் பாலுசெட்டிசத்திரம் மற்றும் திருப்புட்குழி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த 2 கிராமங்களுக்கு நடுவே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலை 4 வழிப்பாதையாக அமைந் துள்ளது. இந்த 2 கிராமங்களை சுற்றி, 35-க்கும் மேற்பட்ட கிராமங் கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், அன்றாட தேவைகளுக் காக பாலுசெட்டி-திருப்புட்குழி இடையே உள்ள சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அவலம் அதிகரித்து வருவதாகவும், கடந்த 14 ஆண்டுகளில், குறிப்பிட்ட அப் பகுதியில் மட்டும் 392 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக வும் பொதுமக்கள் தெரிவிக் கின்றனர். இதனால், தொடர் உயிரி ழப்புகளை தடுக்க அப்பகுதி யில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மேற்கூறிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது: பாலுசெட்டி-திருப்புட்குழி கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வளைவாக அமைந்துள்ளது. 4 வழிப்பாதை அமைக்கும்போதே, கிராம மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடைமேம்பாலம் அமைக் கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை அதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. விஜயராகவ பெரு மாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள், குறிப்பிட்ட அப்பகுதியில் சாலையை கடக்கும் போது விபத்துகளில் சிக்கி உயிரி ழக்கின்றனர். பாலுசெட்டி சத்தி ரத்தில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளிக்கு வரும் மாண வர்கள் இந்த சாலையை கடந்து தான் வருகின்றனர்.
ஆபத்தான இப்பகுதியில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையிலான பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான்கள், பாதசாரி கள் கடக்குமிடத்தை குறிப்பிடும் அடையாளங்கள் அமைக்கப் படவில்லை. அதனால், விபத் துகள் தொடர்ந்து அதிகரித்து வரு கின்றன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இப்பகுதி யில் ஆய்வு மேற்கொண்டு நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட சாலைப் பகுதியில், விழிப்புணர்வு பலகைகள் மற்றும் வாகன ஓட்டி களை எச்சரிக்கும் பலகைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். சாலையை கடக்கும் பகுதி யில் நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக, தேசிய நெடுஞ் சாலைத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்று உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT