Last Updated : 05 Feb, 2016 09:22 AM

 

Published : 05 Feb 2016 09:22 AM
Last Updated : 05 Feb 2016 09:22 AM

மகாமகப் பெருவிழா பாதுகாப்பு பணிகள் தொடர்பாக கும்பகோணத்தில் ரயில்வே ஐஜி-க்கள் ஆய்வு

மகாமகப் பெருவிழா பாதுகாப்புப் பணி தொடர்பாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி-க்கள் நேற்று ஆய்வு மேற்கொண் டனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற் காக நாடெங்குமுள்ள லட்சக்கணக் கான பக்தர்கள் ரயில் மூலம் கும்ப கோணம் வரவுள்ளனர். இதை யொட்டி, வரும் 13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், தஞ்சாவூர் முதல் மயிலாடுதுறை வரையுள்ள அனைத்து ரயில் நிலை யங்களும் தூய்மைப்படுத்தப்பட்டு, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய் யப்பட்டுள்ளன.

கும்பகோணம் ரயில் நிலையத் தில் தற்காலிகமாக 50 கழிப்பிடங் களும், 30 இடங்களில் தற்காலிக டிக்கெட் கவுன்ட்டர்களும் அமைக் கப்படவுள்ளன. இரண்டாவது பிளாட்பாரத்திலிருந்து மூன்றாவது பிளாட்பாரத்துக்கு நடைமேம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக, முகப்பு பகுதியிலும், குட்ஷெட் பகுதியி லும் தற்காலிக கூடாரங்கள் அமைக் கப்படவுள்ளன. அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரயில்கள் மூலம் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப் பாதை போலீஸார் உட்பட 3,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள் ளனர்.

அலகாபாத் கும்பமேளாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட வரும், மத்திய ரயில்வே ஐஜி-யுமான ஏ.கே.சிங் மற்றும் தெற்கு ரயில்வே ஐ.ஜி. எஸ்.சி.பாரி ஆகி யோர் கும்பகோணம் ரயில் நிலை யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புப் பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

மேலும், மாதுளம்பேட்டை ரயில்வே கேட் மற்றும் மூன்றாவது பிளாட்பாரப் பகுதிகளில் புதிதாக நுழைவாயில் அமைக்கப்படவுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற் கொண்ட அவர்கள், அங்கு அடிக் கடி ரயில்கள் வருவதால், விபத்து ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யு மாறு ஆலோசனை வழங்கினர்.

ஆய்வின்போது, ரயில்வே பாது காப்புப் படை எஸ்.பி. செந்தில் குமரன், இருப்புப் பாதை எஸ்.பி. ஆனி விஜயா, கும்பகோணம் டிஎஸ்பி சிவ.பாஸ்கர், ரயில் நிலைய மேலாளர் சிவராமன் உடனிருந்தனர்.

துறவியர் மாநாட்டுக்கு பிரதமர் வாழ்த்து

மகாமகப் பெருவிழாவை யொட்டி கும்பகோணத்தில் அகில பாரத துறவியர் மாநாடு வரும் 18-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்கவும், மகாமக விழாவில் புனித நீராட வும் வருமாறு, பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தபோது அகில பாரத துறவியர் மாநாட்டு அமைப்பாளர் மருதாசல அடிகளார், முதன்மை ஒருங் கிணைப்பாளர் சுவாமி ராமா னந்தா உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

கும்பகோணத்தை பாரம் பரிய நகரமாக அறிவிக்க வேண்டும். கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத் தினர். துறவியர் மாநாடும், மகாமகப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெற வாழ்த் துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வ தாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x