Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த மாவீரன்ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம். வீரம் செறிந்த தமிழர் மரபில்ஒண்டிவீரன் பெயர் என்றும் நினைவுகூரப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், ‘‘ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கொடிக்க தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியசுதந்திரப் போரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரரின் நினைவு நாள். ஒரு கையைஇழந்த பிறகும் நம்பிக்கையை இழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று ஆங்கிலேயரை வேட்டையாடிய மாவீரன் ஒண்டிவீரனின் தீரத்தை எந்நாளும் போற்றுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் ஒண்டி வீரன் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment