Published : 08 Jun 2014 12:10 PM
Last Updated : 08 Jun 2014 12:10 PM
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள தமிழக முதல்வர் அறிவித்துள்ள 7 அம்சத் திட்டங்களை வரவேற்றுள்ள காவிரி டெல்டா விவசாயிகள், திட் டங்களை வெளிப்படைத் தன்மை யுடன் செயல்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் மேட்டூர் அணை யில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகு படிக்கு வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இந்த ஆண்டில் திறக்க வாய்ப் பில்லை எனவும், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் 7 அம்ச திட்டங்களையும் அறிவித்து தமிழக முதல்வர் ஜெய லலிதா வெள்ளிக்கிழமை உத்தர விட்டுள்ளார்.
இதன்படி, டெல்டா மாவட்டங்க ளில் 12 மணி நேரத்துக்கு மும்முனை மின்சாரம், நீரை வயல் களுக்கு கொண்டு செல்ல 7,000 விவசாயிகளுக்கு 600 அடி குழாய்கள், 100 சத வீத மானியத்தில் சமுதாய நாற்றங் கால், முழு மானியத்தில் நெல் நடவு இயந்திரங்கள் மற்றும் களை எடுக்கும் கருவிகள் உள்ளிட் டவை 200 விவசாயக் குழுக்க ளுக்கு வழங்கப்படும். உயிர் உரங் கள், நுண்ணூட்டக் கலவை உள்ளிட் டவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுமெனவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
“குறுவை சாகுபடியை ஊக்கு விக்க தமிழக முதல்வர் அறிவித் துள்ள திட்டங்களை வரவேற்கி றோம். அதே நேரத்தில் கடந்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பலரிடம் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இதற்கு தேவையான சுற்றளவுள்ள குழாய்கள் வழங்கப்படாததே காரணம். மேலும், உழவுக்குப் பயன் படுத்தப்படும் டிராக்டர், டீசல் பம்பு செட்டுகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும்.
சமுதாய நாற்றங்கால் மூலம் நாற்றுகளை தயாரித்து, விவசாயி களுக்கு முழு மானியத்தில் வழங்கப்படுமென தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த காலங் களில் யார் சமுதாய நாற்றங் கால் தயாரிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வில்லை. இது ஊழலுக்கு வழிவகுத்தன.
மேலும், விவசாயக் குழுக்க ளுக்கு முழு மானியத்தில் நடவு இயந்திரம், களையெடுக்கும் கருவி கள் வழங்கப்படுமென முதல்வரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளதா, எந்த அடிப்படையில் அமைக்கப் படுகிறது என்பன உள்ளிட்ட விவரங் கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இந்த திட்டங்களைச் செயல் படுத்தவும், கண்காணிக்கவும் விவ சாயிகள் கொண்ட குழுக்களை அமைத்து, அவர்களது ஒப்புதலைப் பெற்று தான் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். இதற்கான நட வடிக்கையை முதல்வர் முன் னெடுக்க வேண்டும்” என்றார்.
அணையில் தண்ணீர் தட்டுப் பாடு உள்ள நிலையிலும் குறுவை சாகுபடி நடைபெற வேண்டும், விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அந்த பயன் யாரைச் சென்றடைய வேண்டுமோ, அவர்களைச் சென்ற டைந்துள்ளதா என்பதை கண் காணிக்க வேண்டியதும் முக்கிய மானது.
திட்டங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான் விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT