Published : 16 Aug 2021 02:54 PM
Last Updated : 16 Aug 2021 02:54 PM
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஆக. 16) வெளியிட்ட அறிவிப்பு:
''1. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் மாற்றப்பட்டு, தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வரும் தீபா சத்யன் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாகப் பதவி வகித்துவரும் இளங்கோ மாற்றப்பட்டு, ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. கடலோரப் பாதுகாப்புக் குழு (ராமநாதபுரம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் ஜெயந்தி மாற்றப்பட்டு, அமலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. அமலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் மகேஷ்குமார் மாற்றப்பட்டு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு - 2 (நிதி நிறுவனங்கள்) (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்துவரும் கல்பனா நாயக் மாற்றப்பட்டு, ரயில்வே (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT