Published : 22 Jun 2014 10:17 AM
Last Updated : 22 Jun 2014 10:17 AM

திமுகவுக்கு இனி வளர்ச்சி கிடையாது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

திமுக தலைமையின் நடவடிக்கை கள் கட்சியின் அழிவுப்பாதைக்கு வழி வகுப்பதாக உள்ளது. திமுக வுக்கு இனி வளர்ச்சி என்பதே கிடையாது என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி யைத் தொடர்ந்து திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகங்கள் 34-ல் இருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலை யில் பழனி மாணிக்கம், கே.பி.ராமலிங்கம் உள்பட 33 பேர் கட்சி யில் இருந்து சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

திமுக நடவடிக்கை பற்றி?

இதுதான் அவர்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை (சிரிக்கிறார்).

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் கட்சியில் தவறு செய்தவர்களா?

அதுபற்றி கட்சித் தலைமைதான் விளக்க வேண்டும். ஆனால், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக, தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உங்கள் ஆதரவாளர்களான கே.பி.ராமலிங்கம், போஸ் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களே?

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நான் திமுகவில் இருந்து முழுமையாக நீக்கப்படவில்லை. திமுகவினர் பலர் எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தனர். ஒரு திருமண விழாவில் நானும் ராமலிங்க மும் சந்தித்தோம். என்னை சந்திப்போரை எல்லாம் நீக்குவது கண்மூடித்தனமாக உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் கட்சி மீண்டும் வலுப்பெறுமா?

இந்த நடவடிக்கை கேலிக்கூத் தாக உள்ளது. திமுகவின் சமீபகால நடவடிக்கைகள், கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதுபோல் உள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தான் திமுக தோற்றுள்ளது. அதைப் பற்றி தலைமை கண்டுகொள் ளாதது ஏன்?

என்ன நடவடிக்கை மூலம் திமுகவை வலுப்படுத்த முடியும்?

திமுகவுக்கு இனி வளர்ச்சி என்பதே இல்லை. அது முடிந்து விட்டது.

இவ்வாறு அழகிரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x