Published : 14 Aug 2021 04:00 PM
Last Updated : 14 Aug 2021 04:00 PM
புதுச்சேரியில் 101 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 14)வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,049 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-70, காரைக்கால்-12, ஏனாம்-4, மாஹே-15 என 101 (2.00 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 199 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 737 பேரும் என மொத்தமாக 936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் மாஹேவைச் சேர்ந்த ஒருவர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,804 ஆகவும், இறப்பு விகிதமும் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 463 (97.76 சதவீதம்) ஆக இருக்கிறது.
இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 427 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 35 ஆயிரத்து 947 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 57 ஆயிரத்து 568 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT