Published : 25 Feb 2016 02:45 PM
Last Updated : 25 Feb 2016 02:45 PM

என்ன ஜாதி... எவ்வளவு செலவு செய்வீர்? - காங்கிரஸ் நேர்காணலில் கேள்விகள்

காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் என்ன ஜாதி, எவ்வளவு செலவு செய்ய முடியும், திமுக கூட்டணியின் பலம் குறித்த கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் நேற்று அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது. மதுரையில் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேர்காணல் நடத்தினார்.

மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்து 100-க்கும் அதிகமானோர் தேர்தலில் சீட் கேட்டு மனு அளித்தனர். நேர்காணலின்போது ‘போட்டியிடுபவரின் ஜாதி, ஜாதிவாரியாக தொகுதியில் உள்ள வாக்குகள், தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும், திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது நல்ல முடிவா’ என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் உசிலம்பட்டி தொகுதியில் சீட் கேட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.6 கோடி செலவு செய்யத் தயார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நேர்காணல் குறித்து செல்வப் பெருந்தகை கூறியது: காங்கிரஸ் தொண்டர்களிடம் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் உள்ளது. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என அறிவதற்கே ஜாதி உள்ளிட்ட கேள்விகளை கேட்கிறோம். அனைத்து விவரங் களும் கட்சியின் மாநிலத் தலை மையிடம் அளிக்கப்படும் என்றார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ‘பாரம் பரியமாக கட்சியில் இருப்பது, கட்சிக்காக குடும்பத்தினரின் தியாகம் என பல ஆதாரங்களைக் கொண்டு வந்தோம். ஆனாலும், தேசிய கட்சியான காங்கிரஸிலும் திமுக, தேமுதிக உள்ளிட்ட திராவிட கட்சிகள் பாணியில் ஜாதி, செலவு குறித்துதான் முக்கியமாக கேட்கப்பட்டது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x