Published : 14 Aug 2021 12:53 PM
Last Updated : 14 Aug 2021 12:53 PM

தமிழக வேளாண் பட்ஜெட்: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என, தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள்:

* நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லுக்கான கொள்முதல் விலை சாதாரண ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,015-ம், சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி, ஆக மொத்தம் ரூ.319.38 கோடி ஒதுக்கீடு.

* சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடி மட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையத்துக்காக ரூ.119.402 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம், காய்கறி விதைத் தளைகள் விநியோகத்துக்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு

* நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து மானியம் வழங்கி, 1,50,000 ஹெக்டேரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 லட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு.

* ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.

* முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x