Published : 14 Aug 2021 12:10 PM
Last Updated : 14 Aug 2021 12:10 PM
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணையின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
அதில் நூற்றுக்கணக்கானவர்கள் பயிற்சி பெற்றனர். கடந்தக் கால ஆட்சியில் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதில் அதிமுக அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணை தாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் செயல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதனை நிறைவேற்று வகையில் இன்று (சனிக்கிழமை) அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணையின் கீழ் பணி நியமண ஆணையை ஆணையயை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பயிற்சி பெற்ற 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மா. சுப்பிரமண்யம், குன்றக்குடி பொன்னபலம் அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மறைந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT