Published : 14 Aug 2021 11:16 AM
Last Updated : 14 Aug 2021 11:16 AM

தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:

* தமிழகத்தில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

* தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்.

* இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்க திட்டத்தில் முதற்கட்டமாக 2,500 இளைஞருக்கு பயிற்சி பயிற்சி அளிக்கப்படும்.

* நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும் ஒரு லட்சம் பனங்கன்றுகளும் மானியத்தில் விநியோகம்

* உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம்

* உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்புத் திட்டம்

* தென்னையில் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

* ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ. 10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இது ரூ.21.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* பதியன்போடுதல், கவாத்து, நுண்ணுயிர் பாசனை அமைப்பு, பராமரித்தல் போன்ற பயிற்சிக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x