Published : 13 Aug 2021 02:59 PM
Last Updated : 13 Aug 2021 02:59 PM
மாற்றுத் திறனாளிகளுக்காக உலக வங்கியின் உதவியுடன் ’Rights’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கவுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அம்சங்கள்:
* காத்திருப்புப் பட்டியலில் உள்ள 9,173 தகுதியுள்ள நபர்களுக்கும் மாதத்திற்கு 1,500 ரூபாய் பராமரிப்புத் தொகையை உடனடியாக வழங்குவதற்காக திருத்த வரவு செலவுத் திட்டத்தில் பராமரிப்புத் தொகைக்கான ஒதுக்கீடு 404.64 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 2021-22 ஆம் ஆண்டில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 9,185 நபர்களுக்கு அவர்கள் விரும்பும் கருவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வரவு செலவுத் திட்டத்தில் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்காக 50.66 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
* தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை மற்றும் மாதிரியில் தெரிவினை வழங்கும் வகையில், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு அறிமுகப்படுத்தும்.
* உலக வங்கியின் உதவியுடன் ’Rights’ திட்டத்தை இந்த அரசு தொடங்கவுள்ளது. குறைபாடுகளை தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை பெருமளவில் அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் அவர்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT