Published : 13 Aug 2021 01:26 PM
Last Updated : 13 Aug 2021 01:26 PM
அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
* இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை 1-7-2021 முதல் முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும்.
* பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
* அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 1-4-2022 முதல் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT