Published : 13 Aug 2021 12:16 PM
Last Updated : 13 Aug 2021 12:16 PM

பட்ஜெட் 2021; 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111 கோடி: பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்

சென்னை

ரூ.111 கோடி மதிப்பீட்டில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

* சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

* அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

* ரூ.111 கோடி மதிப்பீட்டில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.

* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை

* ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 50 குறு நீர்ப்பாசனங்களை தரப்படுத்துவதற்கான திட்டம் தொடங்கப்படும்.

* நீர்வளத்துறையின் பணிகள் நவீனமயமாக்கப்படும்.

* நவீன தொழில்நுட்பங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆராய்ந்து ஜிபிஎஸ், ஜிஐஎஸ் போன்றவற்றின் உதவியுடன் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு நீர்வள, தகவல் அமைப்பு ரூ.30 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

* ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x