Published : 13 Aug 2021 11:46 AM
Last Updated : 13 Aug 2021 11:46 AM
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.
அதில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அதிலுள்ள முக்கிய அம்சங்கள்
* சீர்மிகு நகர திட்டத்திற்கு 2, 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*சென்னையில் உள்ள நீர் வழிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் 2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
*ஆந்திர பிரேதேச கிருஷ்ணா நீர் தேக்கத்திலிருந்து சென்னை நீர் நிலையங்களுக்கு
தண்ணீர் கொண்டு வருவதற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
* சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.
* சென்னையின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும். சென்னை நகரில் 3 இடங்களில் அதாவது கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை -ஸ்ட்ராண்ஸ் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மொத்தம் 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் மொத்தம் 2,371 கோடி ரூபாய் செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
* சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்படும்.
* பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புர ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக இந்த அரசு ஒரு நகர்ப்புர ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும். 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT