Published : 24 Feb 2016 02:20 PM
Last Updated : 24 Feb 2016 02:20 PM
நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரத்தின் செயல் விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியானது. மேலும், 1-1-2016-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கைப் பணி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்கூட்டியே துணை வாக்காளர் பட்டியல் வெளி யாகும் என்றும் கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 ஆயிரத்து 433 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், 7 ஆயிரத்து 288 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 5 ஆயிரத்து 470 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்திய இந்த இயந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து பெல் நிறுவன அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இயந்திரங்களை பயன்படுத்த தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தை பயன்படுத்தியபோது அதில் உள்ள சின்னங்களுக்கு அருகில் இருக்கும் பட்டனை அழுத்தி வாக்களித்தனர். ஆனால், தங்களது வாக்கு குறிப்பிட்ட கட்சிக் குத்தான் கிடைத்ததா? என்று தெரி யாமல் இருந்தது. இதனால், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, வாக்காளர்களின் கோரிக்கையை ஏற்று புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள் ளனர். தமிழகத்தில் இந்த இயந்தி ரம் இதுவரை பயன்படுத்தப்பட வில்லை. எனவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த இயந்தி ரத்தை நடைமுறையில் கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்துள்ளது. அதன் படி, வேலூர் மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியின ருக்கு செயல் விளக்கம் அளிக்க உள்ளனர். இதற்காக 300 இயந்திரங் களை வேலூர் மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘நடை பெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்ததும் அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து வரும் அச்சிடப்பட்ட காகித சீட்டில் தெரிந்துகொள்ளலாம். இதை வாக்காளர்கள் மட்டுமே பார்க்க முடியும். அதனை எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த அச்சிட்ட காகிதச்சீட்டு, இயந்திரத்தின் மறு பக்கத்தில் உள்ள சிறிய பெட்டிக்குள் விழுந்துவிடும்.
அந்த இயந்திரத்தை பயன்படுத் துவது குறித்தும் அது செயல்படும் விதம் குறித்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பின்னர், பொதுமக்கள் முன்னிலையிலும் செயல் விளக்கம் அளிக்கப்படும். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதி களில் இந்த இயந்திரம் பயன்பாட் டில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ மாக தகவல் இல்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT