Published : 12 Aug 2021 04:39 PM
Last Updated : 12 Aug 2021 04:39 PM

முதலமைச்சர் காப்பீடு திட்டம்: கரோனா சிகிச்சை கட்டணத்தில் மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்கு வழங்கப்படும் கட்டணம், தினசரி அடிப்படையிலிருந்து தொகுப்பு முறையில் மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தீவிரமில்லாத கோவிட் சிகிச்சைக்கு தினசரி கட்டணம் 5,000 ரூபாய் என இருந்த நிலையில், அது தொகுப்பு கட்டண முறையில் ரூ.3,000 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உதவியுடன் வழங்கப்படும் சிகிச்சைக்கு ரூ.15,000 ஆக இருந்த தினசரி கட்டணம், தொகுப்பு முறையில் ரூ.7,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு தினசரி கட்டணம் ரூ.35,000 ஆக இருந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தால், மொத்தமாக ரூ.1,75,000 செலுத்த வேண்டும். தற்போது தொகுப்பு கட்டணத்தில் ரூ.56 ஆயிரத்து 200 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்கள், தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.

தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு நாளொன்றுக்கு ரூ.3,000, தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ரூ.7,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x