Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
மதுரை வெள்ளக்கல் உரக்கி டங்கில் குப்பையிலிருந்து தயா ரிக்கப்பட்ட இயற்கை உரம் 10 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு குவிந்து கிடக்கிறது. இதை சிறு குறு விவசாயிகளுக்கு இல வசமாக வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் நாளொன்றுக்கு 750 டன் குப்பை சேகரமாகிறது. இக்குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம், வெள்ளக்கல் நகர் பகுதியில் உள்ள உரக்கிடங்கில் கொட்டி மட்கும், மட்காத குப்பைகள் என தரம் பிரிக்கப் படுகின்றன. இதில் மட்கும் குப் பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த இயற்கை உரத்தை கிலோ ரூ.2.50-க்கு விவசாயிகளுக்கு வழங் குவதாக மாநகராட்சி அறிவித்தது. ஆனால், யாரும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து 10,000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தேங்கியது. தற்போது இந்த உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறுகையில், உழவர் அடையாள அட்டை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு இயற்கை உரத்தை இலவசமாக வழங்க உள்ளோம். விவசாயிகள் கொண்டுவரும் வாகனங்களில் உரம் ஏற்ற கூலியாக ஒரு டன்னுக்கு ரூ.100 அளித்தால் போதுமானது. பிற விவசாயிகளுக்கும், மகளிர் குழுக்களுக்கும் உரத்தை கிலோ ரூ.1-க்கு வழங்குவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT