Published : 11 Aug 2021 05:07 PM
Last Updated : 11 Aug 2021 05:07 PM
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு முஸ்லிம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிவுக்குப் பின்வரும் தேர்தல் கால அட்டவணை, இன்று தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செய்தல்- 12.08.2021 (வியாழக் கிழமை) (முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை)
வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள்- 16.08.2021 (திங்கள் கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பு மனு சரிபார்த்தல்- 17.08.2021 (செவ்வாய்க் கிழமை) (பிற்பகல் 1.00 மணிக்குள்)
வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாள்- 18.08.2021 (புதன் கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள்- 19.08.2021 (வியாழக்கிழமை)
தேர்தல் அவசியமானால், 26.08.2021 (வியாழக் கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600001-ல் நடைபெறும்.
தேர்தல் முடிவுகள்- 27.08.2021 (வெள்ளிக் கிழமை) அன்று வெளியிடப்படும்''.
இவ்வாறு சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT