Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
கரோனா பரவலைக் கட்டுப் படுத்த பாஜகவின் சுகாதார தன்னார் வலர்களைக் கொண்டு தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்களில் களப்பணியாற்ற இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் நேற்று பாஜக சார்பில் மாநில அளவிலான சுகா தார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடை பெற்றது. இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், கரு.நாகராஜன், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாநிலத் தலை வர் அண்ணாமலை பேசியதாவது:
இந்தக் கரோனா தன்னார்வலர் குழுவில் ஒரு மாவட்டத்துக்கு 4 பேர் என்கிற விகிதத்தில் 60 மாவட்டங்களைச் சேர்ந்த 240 பேர் வந்து இணைந்துள்ளீர்கள். கரோனா தொற்றை இந்தியாவை விட்டு விரட்ட, மத்திய அரசோடு இணைந்து கிராமந்தோறும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும். அனைத்து கிராம மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்த வேண்டும். நல்ல உணவு பழக்க வழக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும். யோகா உள்ளிட்ட வற்றை பொதுமக்களிடம் கொண் டுச் சேர்க்க வேண்டும்.
இதற்காக அகில இந்திய அளவில் கூட்டங்கள் நடத்தப்பட் டுள்ளன. மாவட்ட, மண்டல அளவில் 4 பேர் கொண்ட குழுவில் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்கு நீங்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்க ளில் களப்பணியாற்ற வேண்டும்.கிராமந்தோறும் 2 தன்னார்வலர் களை நியமிக்க வேண்டும். அடுத்த ஒருவாரத்தில் இதனை செய்து முடிக்க வேண்டும்.
வாய் தவறி பாராட்டு
தேர்தல் நேரத்தில் பாஜக மீதுதிமுக குற்றம் சாட்டியது. தற் போது, ‘மத்திய அரசு 12 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக ஒதுக்கி யுள்ளது. இந்த அரசை மனதாரப் பாராட்டுகிறோம்’ என்று மாநில சுகாதார அமைச்சர் கூறுகிறார். பாஜகவை எதிர்க்க வேண்டிய திமுகவினர் வாய் தவறி நம்மை பாராட்டியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக 4.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்தியாவில்தான் இறப்பு விகிதம் குறைவு. இது மத்திய அரசின் சிறப்பான நடவடிக்கையை காட்டுகிறது. இந்தியாவில் வரும் டிச. 31-ம் தேதிக்குப் பிறகு கரோனா தொற்று இல் லாத நிலையை உருவாக்க வேண்டும்என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பழிவாங்கும் நடவடிக்கை
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவன், “முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ரெய்டு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற திமுகவினர் முயற்சிக்கப் பாருங்கள்.
கடந்த ஆட்சியை குற்றம் சொல்லவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரின் திறமையை காண தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர்”என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT