Published : 10 Aug 2021 02:11 PM
Last Updated : 10 Aug 2021 02:11 PM
புதுச்சேரியில் 101 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 97.82 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.10) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,699 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-58, காரைக்கால்-21, ஏனாம்-3, மாஹே-19 என 101 (1.77 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 766 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 194 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 657 பேரும் என மொத்தமாக 851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,800 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 115 (97.82 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 15 லட்சத்து 51 ஆயிரத்து 621 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 26 ஆயிரத்து 325 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 43 ஆயிரத்து 238 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT