Published : 27 Feb 2016 10:20 AM
Last Updated : 27 Feb 2016 10:20 AM
திருச்சி 43-வது வார்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று முன்தினம் இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200-க்கும் அதிகமான பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
விழாவைத் தொடங்கிவைக்க அரசு தலைமைக் கொறடாவும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான ஆர்.மனோகரன் வந்தார். சிலருக்கு வேட்டி, சேலைகளை வழங்கிய அவர், அங்கு திரண்டிருந்த பெண்களைப் பார்த்து, “இங்கு எதற்காக கூடியிருக்கிறீர்கள் என்று தெரியுமா?” கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.
பின்னர் அவரே, “அம்மாவின் பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவி கள் பெறுவதற்காக” என்று கூறி விட்டு, “அம்மாவுக்கு எத்தனை யாவது பிறந்த நாள்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அப் போதும் யாரும் பதில் சொல்ல வில்லை. இதையடுத்து, “68” என்று அவரே பதில் சொல்லிவிட்டு, பெண்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செய்துள்ள அம்மாவின் பிறந்த நாளைப் பற்றி, பெண்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் வாங்கிவிட்டீர்களா?”’ என்று கேட்டார். அப்போது சிலர் வாங்கிவிட்டதாக குரல் கொடுத் தனர். “அப்படியானால் நீங்கள் எல்லாம் அம்மாவுக்குத்தானே ஓட்டு போடுவீர்கள்?” என்று ஆர்வமுடன் கேட்டார். இதற்கும் யாரும் பதில் சொல்லவில்லை.
இதையடுத்து, நிலைமை சமா ளிக்கும் வகையில், “அம்மாவுக்கு ஓட்டு போடுபவர்கள் எல்லாம் கையை தூக்குங்கள்?” என்றார். ஆனால், அப்போதும் யாரும் கையைத் தூக்கவில்லை. இதனால், மிகவும் தர்மசங்கடத்துக்கு உள்ளான அரசு தலைமைக் கொறடா மனோகரன் மீண்டும் அதே கேள் வியைக் கேட்டார். இந்தமுறை முன்வரிசையில் இருந்த சிலர் மட்டும் கையை உயர்த்தினர். இதையடுத்து, அப்பாடா என்று சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட அவர், அன்ன தானத்தை தொடங்கிவைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT