Published : 17 Mar 2014 01:33 PM
Last Updated : 17 Mar 2014 01:33 PM

நாமக்கல் தொகுதி தேமுதிக வேட்பாளர் உடல்நலக் குறைவால் விலகல்

விஜயகாந்த் அறிவித்த நாமக்கல் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.மகேஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிக, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அண்மையில் அறிவித்தது. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அவர் பிரச்சாரத்தை துவங்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் அத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.மகேஸ்வரன் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாவது: "தேர்தலில் இருந்து விலகும் தனது முடிவு குறித்து கட்சி மேலிடத்துக்கு மகேஸ்வரன் தெரிவித்துவிட்டார். அவர் தற்போது கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மகேஸ்வரன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தாலும், விஜயகாந்த் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாமக்கல்லில் இன்று பிரச்சாரம் மேற்கொள்வார். புதிய வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக அவர் பின்னர் இறுதி முடிவு எடுப்பார்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக மாணவரணி முன்னாள் துணை செயலாளரான என்.மகேஸ்வரன் கடந்த 2009 லோக்சபா தேர்தலிலும் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x