Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக்கவசங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இவை சட்டப்படி காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அங்கீகாரம் பெற்றவையாகும்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வேறு ஒரு நிறுவனம் தரமற்ற முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்ததில், பூந்தமல்லியைச் சேர்ந்த ஆண்ட்ரியா டிசைனர்ஸ் மற்றும் ஆர் கிளாத்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான கருணாநிதி, அவரது மனைவி அன்பரசி ஆகியோர் போலி முகக்கவசங்களை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கந்தகுமார் தலைமையில் சென்ற போலீஸார், அங்கிருந்த போலி முகக்கவசங்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நிறுவன உரிமையாளர் கருணாநிதியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT