Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

‘தயவு செய்து லஞ்சம் தர வேண்டாம்’ - அறிவிப்பு பலகை வைத்த விஏஓ

கூத்தலூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தயவு செய்து லஞ்சம் தராதீர் என அறிவிப்பு பலகை வைத்துள்ள விஏஓ அருள்ராஜ்.

காரைக்குடி

தமிழகத்தில் லஞ்சம் வாங்காத அதிகாரிகளை காண்பது அரிதாகி விட்டது. இந்நிலையில், சமீபத்தில் காரைக்குடி அருகே கூத்தலூர் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்ற அருள்ராஜ், தனது அலுவலகத்தில் தயவு செய்து லஞ்சம் தராதீர், லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். மேலும் இதுதொடர்பான அறிவிப்பை தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதை கிராம மக்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து விஏஓ அருள்ராஜ் கூறியதாவது: 2014-ல் பணியில் சேர்ந்தது முதல், தற்போது வரை லஞ்சம் வாங்கியதில்லை. எனது பெயரை பயன்படுத்தி, யாரும் பணம் வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு பலகை வைத்தேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x