Published : 07 Feb 2016 11:11 AM
Last Updated : 07 Feb 2016 11:11 AM
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசின் மகத்தான திட்டமாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முந்தைய பயிர்க் காப்பீட்டு திட்டங்களில் இருந்து பல்வேறு அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
திட்டத்தின் சிறப்புகள்
1985-ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகமானபோது மாவட்ட அளவிலேயே மகசூல் சோதனை நடத்தப்பட்டது. அதாவது மாவட்டத்தின் சில இடங்களில் சாகுபடி காலத்தின் இறுதியில் மகசூல் சோதனை நடத் தப்படும். அந்த சோதனையின் அடிப் படையிலேயே ஒட்டுமொத்த மாவட் டத்தின் மகசூல் இழப்பீடு மதிப்பீடு செய்யப்படும்.
உதாரணமாக அந்த சோதனையின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த ஆண்டில் மாவட்டத்தில் 50 சதவீத அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டால், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் காப் பீட்டுத் தொகையில் 50 சதவீதம் இழப் பீடாக வழங்கப்படும்.
ஒருவேளை அதே மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள விவசாயிகளின் சாகுபடி முற்றாக அழிந்து 100 சத வீதம் இழப்பு ஏற்பட்டிருந்தால் கூட அவர்களுக்கு 50 சதவீத இழப்பீடு மட்டுமே கிடைக்கும். அதேபோல் அந்த மாவட்டத்தின் இன்னொரு பகுதி யைச் சேர்ந்த விவசாயிகளுக்கு எவ்வித இழப்பும் இல்லாமல் சாகுபடி சிறப் பாக இருந்து 100 சதவீத மகசூல் கிடைத்திருந்தால் கூட, அவர்களுக்கும் காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் இழப்பீடாக கிடைக்கும்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயி களிடம் வரவேற்பை பெறாமல் போன தற்கு இத்தகைய மாவட்ட அளவிலான மகசூல் சோதனை நடத்தும் நடைமுறை பிரதான காரணமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து வட்டார அள வுக்கும், பிறகு ஒன்றிய அளவுக்கும் சுருங்கிய மகசூல் சோதனை நடைமுறை, கடந்த சில ஆண்டுகளாக ஃபிர்க்கா அளவில் நடத்தப்பட்டு வரு கிறது. எனினும் ஃபிர்க்கா அளவி லான மகசூல் சோதனை கூட உண்மை யிலேயே பாதிக்கப்படும் விவசாயிக ளுக்கு இழப்புக்கு ஏற்ற காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதாக இல்லை. இந்த சூழலில்தான் ஃபிர்க்கா அளவில் இருந்து மேலும் சுருங்கி கிராம அளவில் மகசூல் சோதனை நடத்தும் ஏற்பாடு பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. இது இந்த புதிய திட்டத்தின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விதைக்கும்போதே பாதிக்கப்பட்டால்
விதை விதைக்கும்போதோ அல்லது நாற்று நடவும்போதோ அதிக மழை அல்லது வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டு, சாகுபடியைத் தொடர முடியாமல் போகலாம். ஒரு கிராமத்தின் பெரும் பாலான விவசாயிகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது, ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்கள் காப்பீடு செய்த தொகையில் 25 சதவீதம் உடனடியாகக் கிடைக்கும். இது புதிய திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
அறுவடை பாதிக்கப்பட்டால்…
அறுவடைக்கு 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மழை, வெள்ளம், புயல் போன்ற காரணங்களால் பயிர் அழிய நேரிடலாம். காப்பீடு செய்யப்பட்ட ஒரு கிராமத்தில் அவ்வாறு அழிவு ஏற்பட் டால், 48 மணி நேரத்துக்குள் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதிகாரிகளின் மதிப்பீட்டு பணிக்குப் பிறகு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். ஆலங்கட்டிமழை, நிலச்சரிவு, வெள் ளப்பெருக்கு போன்ற இயற்கை இடர்களால் சாகுபடி பாதிக்கும்போது உடனடியாக இழப்பீடு பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பு தனி விவசாயிக்கு ஏற்பட்டாலும் இழப்பீடு கோர இந்த புதிய திட்டத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
விரைவாக இழப்பீடு
தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தில் மகசூல் இழப்பீடு மதிப்பீடு செய்யப்பட்டு, இழப்பீட்டின் அளவு உறுதி செய்யப்பட்ட பிறகும் உடன டியாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் தங்கள் பங்குத் தொகையை காப்பீட்டு நிறு வனத்துக்கு கொடுத்த பிறகே, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங் கப்பட்டு வருகிறது. இதனால் சாகுபடி பாதிக்கப் பட்டு ஓராண்டுக்கு பிறகும் கூட இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக் கப்படுகின்றனர். புதிய திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் மானி யத் தொகை முன்னதாகவே காப்பீட்டு நிறுவனத்துக்கு கிடைத்து விடும். அதனால் மகசூல் மதிப்பீட்டுப் பணி முடிந்து, இழப்பீட்டின் சதவீதம் இறுதி செய்யப்பட்ட பிறகு விரைவாக விவ சாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம்
புதிய திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதத்தை மட்டும் தங்கள் பங்கின் பிரீமியமாக விவசாயிகள் செலுத்தினால் போதும் என்றும், இந்த பிரீமியத் தொகை முந்தைய திட்டத்தை விட குறைவு என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த பிரீமியத் தொகைக் குறைப்பு மற்ற மாநில விவ சாயிகளுக்கு பலனளிக்கலாம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு இதனால் பலன் எதுவும் இல்லை எனவும் கூறப் படுகிறது.
ஏற்கெனவே பிரீமியத் தொகையில் 1 சதவீதத்தை மட்டுமே தமிழக விவ சாயிகள் செலுத்தி வருகின்றனர். மீதி 1 சதவீதம் மாநில அரசால் செலுத்தப் படுகிறது. இந்நிலையில் புதிய திட் டத்தின்படி தமிழக விவசாயிகள் 2 சதவீத பிரீமியம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.
தனியாருக்கு எதிர்ப்பு
புதிய காப்பீட்டுத் திட்டத் தில் பல சாதக அம்சங்கள் இருந்தாலும், தனியார் நிறு வனங்களிடம் பயிர்க் காப்பீட்டை ஒப்படைப் பது விவசாயிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள் ளது. அரசு நிறுவனமான தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டு நிறுவனம் ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தனியார் நிறுவனங் களை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்னவென்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறிய தாவது:
விதைப்பு முதல் அறுவடை வரை சாகுபடியில் அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யப் பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சம். ஆனால் அரசு நிறுவனமான தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் எந்த பகுதியில் காப்பீட்டுத் திட்டத்தை பொறுப் பேற்று செயல்படுத்துகிறதோ அங்கு மட்டுமே விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களில் காப் பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
இந்த திட்டத்தால் பெரும் தனியார் நிறுவனங்களுக்கே அதிக பலன்கள் கிடைக்கும் என்கிறார் ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.அப்பாவு.
‘‘ஒவ்வொரு தனி விவசாயியின் நிலத்திலும் மகசூல் இழப்பு மதிப்பீடு செய்யப்பட்டு, இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட் டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஒவ்வொரு விவசாயியின் வயலுக்கும் சென்று மதிப்பீடு செய்வதற்கான வசதிகள் இல்லை என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஒவ்வொரு விவசாயியின் வயலிலும் எவ்வளவு பரப்பில், என்னென்ன பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை ஒவ்வொரு ஆண்டும் கணக் கெடுக்கிறார்கள். அவ்வாறு இருக் கும்போது, ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் மகசூல் இழப்பீட்டை மட்டும் மதிப்பிட முடியாது என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது.
இந்த திட்டத்தின்படி, ஒரு கிராமத் தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படும் சூழலில், ஒட்டுமொத்த கிராமத்திலும் பயிர் அழிவு ஏற்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். மாறாக வாழை சாகுபடி செய்யும் ஒரு விவசாயிக்கு, அவரது வயலில் மட்டும் 500 வாழைகள் அழிந்து போனால் எவ்வித இழப்பீடும் கிடைக்காது.
விவசாயிகளிடம் பிரீமியத் தொகையை வசூல் செய்து தனியார் நிறுவனங்களிடம் கொடுக்கவே புதிய திட்டம் வகை செய்யும். ஆகவே, இந்த புதிய திட்டத்தால் தனியார் நிறு வனங்களுக்கே பெரும் லாபம் கிடைக்கும் என்று அப்பாவு கூறினார்.
தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன். இது குறித்து கூறும்போது, “வங்கிகளில் வேளாண் கடன் பெறும் அனைத்து விவ சாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு செய் யப்படுகிறது.
அதேபோல் சாகுபடிக்காக நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவோருக்கும் காப்பீடு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இது தவிர, விவசாயிகள் தன்னார்வமாகவும் பிரீமியம் செலுத்தி காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம். ஆனால் கடந்த ஆண்டுகளில் சில விவசாயிகள் ஒரே நிலத்துக்கு 3 வழிகளிலும் காப்பீடு பெற்றுள்ளனர். மேலும், உண்மையிலேயே சாகுபடி இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமலும், பாதிப்பே இல்லாத விவசாயிகள் இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற நிகழ்வுகளும் நிறைய உள்ளன.
ஆகவே, ஒரே சர்வே எண்ணில் வெவ்வேறு இடங்களில் காப்பீடு பெறுவதைத் தடுக்க வேண்டும்” என்றார் ரங்கநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT