Published : 07 Feb 2016 10:13 AM
Last Updated : 07 Feb 2016 10:13 AM
சமக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் இன்று நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய மாநில நிர்வாகி கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். கட்சி விரோத நடவடிக்கைக்காக துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ நீக்கப்பட்டார். வேறு கட்சி களுக்கு தாவிய நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். இது அரசியல் வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. கட்சிக்குள்ளும் சலசலப்பை உருவாக்கியிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் சென்னையில் சமக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை சரத்குமார் கூட்டி, `கட்சிக்கு பின்னடைவு இல்லை’ என அறிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 52 பேரும், மாநில நிர்வாகிகள் 16 பேரும் பங்கேற்று சரத்குமாருக்கான ஆதரவை உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையில் சமக சிறப்பு பொதுக்குழு நெல்லை கேடிசி நகரில் இன்று நடக்கிறது. இதில் 1,443 பேர் பங்கேற்க உள்ளதாக கட்சியின் தென்மண்டல செயலாளர் என்.சுந்தர் நேற்று தெரிவித்தார்.
சரத்குமார் மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிட திட்டமிட் டிருப்பதாக தெரிகிறது. இதுபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச் செந்தூர், கன்னியாகுமரி மாவட்டத் தில் நாகர்கோவில் ஆகிய தொகுதி களிலும் அவர் போட்டியிட வேண் டும் என்று கட்சியினர் ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். கட்சியினரிடம் காணப்படும் உற்சாகத்தால் சரத் குமார் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதி யில் போட்டியிடவே வாய்ப்பு அதிக முள்ளது.
மேலும், கூட்டணி குறித்து அதிமுக தலைமையிடம் இருந்து கிரீன் சிக்னல் ஏதும் இதுவரை கிடைக்காத நிலையில், தலைவர் என்ன முடிவு செய்யவுள்ளார் என்பது தெரியாமல் தொண்டர் களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் இன்றைய பொதுக் குழு விடையளிக்கும் என்று எதிர் பார்க்கலாம். சட்டப் பேரவை தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT