Published : 07 Aug 2021 03:18 AM
Last Updated : 07 Aug 2021 03:18 AM
கடலூரில் நடைபெறும் 2-ம் நிலைகாவலருக்கான தேர்வில் ஆதரவற் றோர் சான்றிதழ் இல்லாததால் வெளியேற்றப்பட்ட விதவைப் பெண்கள், கண்ணீருடன் தங்க ளுக்கு அவகாசம் அளிக்காமல் வெளியேற்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல், சிறைமற்றும் தீயணைப்பு ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர் களுக்கான உடற்திறன் தேர்வு கடந்த 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வில் ஆண்கள் 2,748 பேர், பெண்கள் 1,045 பேர், திருநங்கை ஒருவர் என தேர்வு பெற்றனர். அதன்படி 3,794 தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளை யாட்டரங்கில் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக பெண்க ளுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் விதவைப் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 30 பேர் பங்கேற்றனர்.அப்போது அவர்களிடம் விதவைச் சான்றுகள் மட்டும் இருந்தால் போதாது, ஆதரவற்றோர் சான் றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே அடுத்தக்கட்டத் தேர்வுக்கு செல்ல முடியும் எனக் கூறி, 9 பேரை தேர் வர்கள் வெளியேற்றியுள்ளனர்.
மேலும் சிலர் வட்டாட்சியர் வழங்கிய ஆதரவற்றோர் சான்றிதழ் பெற்றிருந்தும் அவர்களும் வெளியேற்றப்பட்டதால், அவர்கள் மைதானத்திலேயே கதறி அழுதனர். “கணவரை இழந்து நிர்கதியாய் நிற்கும் நிலையில், இத்தேர்வுக்காக முறையான பயிற்சியை பெற்று வந்திருக்கிறோம். எங்களை வெளி யேற்றுவது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப் புகின்றனர்.
விதவைச் சான்றிதழ் மட்டும்இருந்தால் போதாது, ஆதரவற்றோர் சான்றிதழ் பெற்றிருப்ப தோடு, அந்தச் சான்றிதழ் கோட்டாட் சியரால் வழங்கப்பட்டிருக்க வேண் டும். அப்போது தான் அவர்களது சான்றிதழ் ஏற்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
அரசுத் தேர்வுகளில் சான்றிதழ் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரரிடம் விளக்கம் கேட்டு, அவ் வாறு அவர் அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் சான்றிதழ் இணைக்கத் தவறியிருந்தால், அவருக்கு போதிய அவகாசம் அளிக்கப்படும் வாய்ப்பு நடைமுறையில் உள்ள போது, அதைப் பின்பற்றாமல் காவல்துறையின் தேர்வர்கள் நிராகரித்திருப்பது எந்த வகையி லும் சரியான செயல் அல்ல என காவல்துறையில் பணியாற்றும் காவலர்களே ஆதங்கப்பட்ட தையும் அங்கே காண முடிந்தது.
இந்த நிலையில் நேற்று ஆண்களுக்கான முதற்கட்ட தேர்வில் 1,822 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான 2-ம் கட்ட தேர்வு நேற்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தொடங்கியது. இதில், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 550 பேருக்கு பங்கேற்க அழைப்பு விடப்பட்டதில் 543 பேர் பங்கேற்றனர். இவர்களில், 479 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெண் விண்ணப்பதாரர்களுக்கான 2-ம் கட்ட தேர்வு வரும் 12-ம் தேதி நடை பெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT