Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலாப் பய ணிகளை பாதுகாப்பின்றி கூடாரம் அமைத்து தங்க வைப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்த போதும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
நகர்ப்புற சுற்றுலாத்தலங்கள், வனத்துறை சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் மலைக் கிராமப் பகுதிகளின் விளைநிலப் பரப்பில் உள்ள காலியிடங்களில் கூடாரம் அமைத்து பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் நிகழ்வு நடந்து வந்தது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘கொடைக்கானல் மலைக் கிராமங்களில் கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலாப் பயணிகள், கேள்விக்குறியாகும் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதையடுத்து திண் டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள பட்டா இடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலாப் பயணிகள் மீதும், தங்குவதற்கு ஏற்பாடு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியான செய்தியில், ‘கொடைக்கானலில் அதிவேக பைக்குகளால் ஆபத்து, தொடரும் உயிரிழப்புக்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்’ என்ற செய்தி வெளியானது, இதன் மீதான நடவடிக்கையாக, கொடைக்கானல் மலைச்சாலைகளில் அனுமதிக் கப்பட்ட வேகத்தை விட அதி வேகமாக இயக்கப்படும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீதும், மது அருந்திவிட்டு வாக னம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீ ஸார் விதி மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளனர், என திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
‘இந்து தமிழ் திசை’ செய்திகள் மூலம், கூடாரம் அமைக்க தடைவிதிக்கப்பட்டது மற்றும் மலைச்சாலையில் அதிவேக இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை ஆகியவை மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT