Last Updated : 25 Feb, 2016 10:17 AM

 

Published : 25 Feb 2016 10:17 AM
Last Updated : 25 Feb 2016 10:17 AM

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: 15 ஆண்டுகளாக பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத கட்சிகள்

புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவை உறுப்பி னராக கடந்த 15 ஆண்டுகளாக பெண்கள் இல்லாத சூழலே நிலவுகிறது. தற்போதைய தேர் தலில் பெண்களுக்கு போதிய வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் 4 பிராந்தி யங்களான புதுச்சேரி, காரைக் கால், மாஹே, ஏனாம் ஆகிய வற்றில் மொத்தம் 30 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதேபோல் மக்களவை உறுப் பினருக்கு ஓர் இடமும், ராஜ்ய சபாவில் ஓர் இடமும் உள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் உறுப்பினர் களை குறைந்த அளவே கட்சி கள் நிறுத்துகின்றன என்று பெண்கள் தரப்பில் குற்றச் சாட்டு இருந்து வருகிறது. முக்கி யக் கட்சிகள் எதுவும் பெரும் பாலும் பெண்களுக்கு வாய்ப் பளிப்பதில்லை என்றும் தெரிவிக் கின்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி யைச் சேர்ந்த கல்லூரி மாணவி தட்சினி கூறுகையில், “புதுச்சேரி யில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் வாக்களித்து ஆட்சியமைக்கிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடாவது போட்டியிட வாய்ப்பு தருவார்களா என்று நாங் கள் எதிர் பார்க்கிறோம்” என்றார்.

பெண்கள் பலரும் இப்பிரச் சினை தொடர்பாக வெளிப்படை யாகப் பேசினாலும், முக்கியக் கட்சியிலுள்ள பெண்களிடம் கேட் டால் பெயருடன் வெளியிட வேண் டாம் என கூறியே பேச முன் வருகின்றனர். “நாங்கள் தேர்தலில் போட்டியிட விரும்புகி றோம். வெளிப்படையாக கருத்து சொன்னால் கட்சி மேலிடம் அதை ஏற்காது. உண்மை யில் புதுச்சேரியைப் பொருத்த வரை கட்சி ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் தனிப்பட்ட செல்வாக்கு மிக முக்கியமாக தேவை. போட்டியிட வாய்ப்பு கிடைப்பது ஒருபக்கம் இருந்தாலும், புதுச்சேரியில் 3 பேரை நியமன எம்எல்ஏவாக தேர்வு செய்யலாம். அதிலும் பெண்கள் புறக்கணிக்கப்படு கிறார்கள். இதுவரை மொத்த மாகவே 2 பெண்கள் மட்டுமே நியமன எம்எல்ஏவாக இருந்துள்ள னர். அதுதான் பெண்களுக்கான உண்மை நிலை. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு வரை 22 தொகுதிகளில் பெண்கள் போட்டியிட்டதே இல்லை” என்று குறிப்பிடுகின்றனர்.

புதுச்சேரி மகிளா காங்கிரஸ் பொறுப்பாளரான நடிகை நக் மாவிடம் கேட்டபோது, “தற்போது தேர்தலில் போட்டியிட பெண்கள் ஆர்வமாக முன்வருகிறார்கள். கட்சித் தலைமையிடம் இவ்விஷ யத்தை கொண்டு செல்வேன். பிஹாரைப் போன்று புதுச்சேரியி லும் பெண்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப் பார்க்கிறேன்” என்று தெரி வித்தார்.

புதுச்சேரியில் பெண் எம்எல்ஏக்கள்

புதுச்சேரியில் இதுவரை 11 பேர் எம்எல்ஏ-க்களாக இருந் துள்ளனர். அதில் 2 பேர் நியமன எம்எல்ஏக்கள். முதல் சட்டப்பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித் திரி ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவை யில் (1964-68) பத்மினி சந்திர சேகரன், அங்கம்மாள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப்பேரவைக்கு பெண் கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந் தெடுக்கப்பட்டார். அவர் அமைச்ச ராகவும் இருந்தார். 7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏ-வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந் தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல் கே.பக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996ல் அரசியும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 11-வது சட்டப்பேர வைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்எல்ஏ-வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x